: 0422 – 2314143
: info@dilmandram.com
Log in |
Tamil English
  • Home
  • About us
  • Matrimonial Notice
  • Education Notice
  • Photo Gallery
  • Video
  • Feed Back
  • Contact Us
  • முகப்பு
  • எங்களைபற்றி
  • திருமண செய்தி
  • கல்விச்செய்தி
  • புகைப்படம்
  • காணொளி
  • கருத்து
  • தொடர்புக்கு
Dilmandram | Home

    எங்களைப் பற்றி

    கல்விச்சேவையை பிரதானமாக ஏற்றுக்கொண்டு, திருமண தகவல் பரிமாற்றச் சேவையையும் சேர்ந்து செய்து வருகிறது. தேவேந்திர இலக்கிய மன்றம் ஏறக்குறைய 20 வருடங்களாக இந்தக் கொங்கு மண்ணில் ஒரு கல்வி அறக்கட்டளையின் உதாரணமாக, நிறுவனத்தலைவர் திரு.காசிமைந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்று வருகிறது.

    அனைத்து சமுதாய ஏழைமக்கள் என்ற சமூக அரவணைப்பால் , சமுதாய நல்லிணக்கத்தின் வடிவமாக, நமது மன்றம் செயல்பட்டு வருகிறது.எல்லோருக்கும் உணவளித்த மருதநில மக்கள் எல்லோருக்கும் உதவிகளை வாரிவழங்கும் மன்றமாகவும் பரிணமித்து உள்ளது. ஆயிரம் ஏழை மாணவர்களை பட்டதாரிகளாக உருவாக்கி வெற்றிநடை போடுகிறது.

    ”தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா!
    இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம்”

    என்ற வரிகளின் இலக்கணமாய் எத்தனையோ இன்னல்களுக்கு மத்தியில் தொடர்ந்து வளர்ந்து வருகிறது.தந்தையை இழந்து வாடும் குழந்தைகளை தத்தெடுத்து, ஆண்டுதோறும் ரூ.10000/- வழங்கி, அவர்கள் கல்லூரிப் படிப்பு முடிக்கும் வரை, அவர்களுக்கான வாழ்வை உருவாக்கிக் கொடுக்கிற ஒரு சமுதாயப் பணியை 2017-2018-ம் ஆண்டு முதல் செய்து வருகிறது.

    உங்களின் ஆதரவுக் கரங்கள் எங்களை உற்சாகப்படுத்தும்! உங்களின் வாழ்த்துக்களும் ஆசிர்வாதங்களும் எங்களை மேலும் பணி செய்ய ஊக்கப்படுத்தும்! உங்களால் இயன்ற உதவியை தந்தையை இழந்து வாடும் பிள்ளைகளுக்கு வழங்குங்கள்!ஏதேனும் ஒரு பிள்ளைக்கு உதவ விரும்பினால்,மன்ற நிறுவனர் தொலைபேசி எண் 93666-19752-ல் தொடர்பு கொள்ளலாம்!

    நன்கொடை வழங்குவோர்கள்,வருமானவரி செலுத்துபவர்களாக இருந்தால் வருமானவரிச்சட்டம் 80-G ன் வரிவிலக்கு பெறலாம்.மன்றம் பொது அறக்கட்டளையாக,பதிவு எண் 162/2009-ன் படி பதிவு செய்யப்பட்டுள்ளது.

    நன்கொடை செலுத்த வேண்டிய முகவரி
    தேவேந்திர இலக்கிய மன்றம்
    இந்தியன் வங்கி /புலியகுளம் கிளை
    கோயம்புத்தூர்
    A/C NO :835873114 IFSC : IDIB000P077

    நன்கொடை செலுத்திய பின்பு, அது பற்றிய விபரங்களை info@dilmandram.com என்ற ஈமெயில் முகவரிக்கோ அல்லது 94897-24598/93666-19752 என்ற வாட்ஸ் அப் எண்களுக்கோ தெரிவிக்குமாறு வேண்டுகிறோம். அப்போது தான், உடனடியாக ரசீது அனுப்பி வைக்க இயலும்.அந்த ரசீதின் அடிப்படையில் நீங்களும் வருமானவரி விலக்கு கோரமுடியும்!

    திருமண தகவல் மன்றம்/ விதிமுறைகள்

    இலவசமாக பதிவு செய்தால், உங்களது இமெயில் முகவரியில்/ வாட்ஸ் ஆப்பில், இது குறித்த தகவல் தெரிவிக்கப்படும். வரன்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் வேண்டுவோர், ரூ 2000/- / ரூ 1500/- என்ற கட்டணத்தை செலுத்தினால், கடவுச்சொல் உங்களுக்கு வழங்கப்படும். அதைப் பயன்படுத்திதொலைபேசி எண் தவிர மற்ற விவரங்கள் அனைத்தும் பார்க்கலாம். தொலைபேசி எண்கள் வேண்டுவோர் மன்றத்தை தொடர்புகொண்டு இமெயில்/ எஸ்எம்எஸ் /வாட்ஸ்ஆப் மூலமாக அவைகளைப் பெறலாம்.

    இலவச தேடல் என்பதை கிளிக் செய்தால் அடிப்படை விவரங்கள் மற்றும் போட்டோக்களை பார்க்கலாம். முழு விவரங்களை பார்க்க விரும்புவோர் உறுப்பினர் உள்நுழைவு ல் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல் டைப் செய்தால் முழு விவரங்கள் அடங்கிய பக்கத்தை நீங்கள் பார்க்கலாம்.

    உங்களது பிள்ளைகளின் வயதுக்கு ஏற்ப பார்க்க வேண்டுமென்றால் இலவச தேடல், மணமகன் / மாப்பிள்ளை தேடுவது. என்று கேட்கும். நீங்கள் பெண்வரன் தேடுவதாக இருந்தால் மணப்பெண் ஐ கிளிக் செய்யவும். பின்னர் எந்த வயது முதல் எந்த வயது வரை என்ற இடத்தில் உதாரணத்திற்கு 20 முதல் 26 வரை உள்ள பெண் வேண்டுமென்றால் அதை கிளிக் செய்யவும்.பின்னர் உயரம், மதம்,ஆகியவற்றை தேர்வு செய்யவும். அதன்பின் செவ்வாய் / ராகு தோசம் உண்டு / இல்லை என்பதை தேர்வு செய்யவும் பின்னர் என்ன தொழில்/ பெண் வரன் என்ன பணி செய்கிறது என்பதை தேர்வு செய்யலாம். இதை குறிப்பாக தேர்வு செய்யாவிட்டால் அந்த வயதில் உள்ள அனைத்துப் பெண்வரன்களின் விவரங்களையும் பார்க்கலாம். இதை எப்படி மேலும் தேர்வு செய்வது என்பதை மன்றத்தில் தொடர்புகொண்டு பார்க்கவும்.

  © Copyright 2017. All Rights Reserved.

  Designed by | www.goforwebsite.com